Chapter 


1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

 விடை: (ஆ) சைஃபுதீன் கிச்லு

2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

 விடை: (இ) கல்கத்தா

3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

 விடை: (அ) 1930 ஜனவரி 26

4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

விடை: (இ) 1865

5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

விடை: (அ) கோவில் நுழைவு நாள்

6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

 விடை: (ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

I. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

விடை : (ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது

7. கூற்று : காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.

காரணம் : காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி – இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.

விடை: (இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

8. கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின.

காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

விடை: (ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

1. ரௌலட் சட்டம் - பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்

2. ஒத்துழையாமை இயக்கம் - இரட்டை ஆட்சி

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் - M.N. ராய்

4. இந்திய பொதுவுடைமை கட்சி - நேரடி நடவடிக்கை நாள்

5. 16 ஆகஸ்ட் 1946 - கருப்புச் சட்டம்

விடை: 1. ரௌலட் சட்டம் - கருப்புச் சட்டம்

2. ஒத்துழையாமை இயக்கம் - பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் - இரட்டை ஆட்சி

4. இந்திய பொதுவுடைமை கட்சி - M.N. ராய்

5. 16 ஆகஸ்ட் 1946 - நேரடி நடவடிக்கை நாள்