Chapter 14
I) சரியான விடையைத் தேர்வு செய்க
Q1. மாங்கனீசு எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?
விடை : எஃகு தயாரிப்பு
Q2. ஆந்த்ரசைட் நிலக்கரி எவ்வளவு சதவீத கார்பன் கொண்டுள்ளது?
விடை : 80% – 95%
Q3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் எது?
விடை : கார்பன்
Q4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது?
விடை : கோயம்புத்தூர்
Q5. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் எது?
விடை : மகாராஷ்டிரம்
Q6. மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் எது?
விடை : சூரியன்
Q7. புகழ்பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் எது?
விடை : ஜார்கண்ட்
Q8. சோட்டா நாக்புர் பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் கருவாக இருப்பது எது?
விடை : கனிமப்படிவுகள்
II) பொருத்துக
கேள்வி : கீழ்கண்டவற்றை பொருத்துக
பாக்சைட் – ______
ஜிப்சம் – ______
கருப்பு தங்கம் – ______
இரும்புத் தாது – ______
மைக்கா – ______
பொருத்தங்கள் :
அ) சிமெண்ட்
ஆ) வானூர்தி
இ) மின்சாதனப் பொருட்கள்
ஈ) நிலக்கரி
உ) மேக்னடைட்
விடை : 1 – ஆ (பாக்சைட் → வானூர்தி)
2 – அ (ஜிப்சம் → சிமெண்ட்)
3 – ஈ (கருப்பு தங்கம் → நிலக்கரி)
4 – உ (இரும்புத் தாது → மேக்னடைட்)
5 – இ (மைக்கா → மின்சாதனப் பொருட்கள்)
II. கேள்வி – பதில்
Q1. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
விடை : இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ‘இயற்கை வளம்’ என்று அழைக்கப்படுகின்றன.
உதாரணம்: காற்று, நீர், மண், தாதுக்கள், எரிபொருள், தாவரங்கள், வன விலங்குகள்.
வகைகள்:
புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
புதுப்பிக்க இயலா வளங்கள்
Q2. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
விடை : குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் எனப்படுகின்றன.
வகைகள்:
உலோகக் கனிமங்கள்
அலோகக் கனிமங்கள்
Q3. மாங்கனீசியத்தின் பயன்களை குறிப்பிடுக.
விடை : இரும்பின் தரத்தை மேம்படுத்த பயன்படுகிறது.
அணு உலைகளின் உட்புற சுவர்களை அமைக்கிறது.
தூய சிலிகான் மற்றும் போரான் பிரித்தெடுக்க உதவுகிறது.
Q4. இயற்கை எரிவாயு என்றால் என்ன?
விடை : ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட தாவரங்கள், விலங்குகள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தில் மட்குவதன் மூலம் உருவான வாயுவே இயற்கை எரிவாயு.
பயன்பாடு:
சமையல்,
வெப்பப்படுத்தல்,
மின் உற்பத்தி,
வாகன எரிபொருள்.
Q5. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
விடை : நிலக்கரி படிமப் பாறைகளில் கிடைக்கும் எளிதில் எரியக்கூடிய கனிமம். தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் மிக முக்கிய வளம் என்பதால் கருப்பு தங்கம் எனப்படுகிறது.
வகைகள்:
ஆன்திரசைட் – 80-90% கார்பன்
பிட்டுமினஸ் – 60-80% கார்பன்
பழுப்பு நிலக்கரி – 40-60% கார்பன்
மரக்கரி – 40% க்கும் குறைவு
Q6. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளை குறிப்பிடுக.
விடை : மேற்கு வங்காளம் – ஹூக்ளி ஆற்றங்கரை (டிட்டகார், ஜகட்டட், பட்ஜ்-பட்ஜ், ஹவுரா, பத்ரேஸ்வர்).
பிற மாநிலங்கள் – ஆந்திரப்பிரதேசம், பீகார், அசாம், உ.பி., சத்தீஸ்கர், ஒடிசா.
Q7. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகள் எவை?
விடை : மேற்குக் கடற்கரை: மும்பை ஹை, பேஸ்ஸைம், குஜராத் கடற்கரை (அங்கலேஸ்வர், காம்பே-லூனி, அகமதாபாத்–கலோல்).
கிழக்குக் கடற்கரை: அசாம் – திக்பாய், நாகர்காட்டியா, மோரான், ருத்ரசாகர், சாமர் பள்ளத்தாக்கு.
மற்றவை: அந்தமான்-நிகோபார், மன்னார் வளைகுடா, பலேஷ்வர் கடற்கரை.
Q1. புதுப்பிக்க இயலும் வளங்கள் – புதுப்பிக்க இயலாத வளங்கள்
விடை : புதுப்பிக்க இயலும் வளங்கள்: மீண்டும் மீண்டும் இயற்கை முறையில் உருவாகும்.
உதா: சூரிய சக்தி, காற்று சக்தி, அலை சக்தி.
புதுப்பிக்க இயலாத வளங்கள்: மீண்டும் உருவாக இயலாதவை.
உதா: நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
Q2. உலோகக் கனிமங்கள் – அலோகக் கனிமங்கள்
விடை : உலோகக் கனிமங்கள்: உலோகத் தன்மை கொண்டவை.
உதா: இரும்பு, மாங்கனீசு, தாமிரம், தங்கம்.
அலோகக் கனிமங்கள்: உலோகத் தன்மை இல்லாதவை.
உதா: மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம், நிலக்கரி, பெட்ரோலியம்.
Q3. வேளாண் சார்ந்த தொழில்கள் – கனிமம் சார்ந்த தொழில்கள்
விடை : வேளாண் சார்ந்த தொழில்கள்: வேளாண் பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும்.
உதா: பருத்தி, சணல், சர்க்கரை, காகிதம்.
னிமம் சார்ந்த தொழில்கள்: கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும்.
உதா: இரும்பு–எஃகு, சிமெண்ட், அலுமினியம், உரம்
IV. சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்
Q1. சணல் ஆலைகள் என்பவை என்ன? இந்தியாவில் சணல் உற்பத்தியில் முன்னணி மாநிலம் எது?
விடை : குறைந்த விலையில் கிடைக்கும் சணலிலிருந்து பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் சணல் ஆலைகள் எனப்படும்.
உலகில் வங்கதேசத்திற்கு அடுத்து இந்தியா சணல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் சணல் உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம் பெறுகிறது.
Q2. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் மாநிலங்களை எழுதுக.
விடை : மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், பீகார், அசாம், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா.
Q3. சர்க்கரை ஆலைகள் என்பவை என்ன?
விடை : கரும்பு, சர்க்கரை கிழங்குகள் ஆகியவற்றிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலைகள் சர்க்கரை ஆலைகள் ஆகும்.
Q4. உலகில் கரும்பு உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
விடை : உலகில் கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
Q5. இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
விடை : உத்திரப்பிரதேசம்.
Q6. சர்க்கரை ஆலைகள் அமைந்துள்ள மாநிலங்களை எழுதுக.
விடை : உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம்.