Chapter 16


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


 1. தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ………. முதல் ……………….. வரை உள்ளது.

விடை: அ) 8°4’வ முதல் 13°35’வ வரை

2. தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் …………………….. முதல் ………………… வரை உள்ளது.

விடை: அ) 76°18’கி முதல் 80°20’கி வரை

 3. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் …………….. ஆகும்.

விடை: ஆ) தொட்டபெட்டா

 4. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?

விடை: இ) போர்காட்

5. கீழ்க்க ண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?

விடை: அ) பெரியார்

 6. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?

விடை: இ கடலூர்

7. பின்னடையும் பருவக்காற்று ……………… லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.

விடை: ஆ வங்கக் கடல்

 8. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ………………..

விடை: அ) தேனி

 9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ………………

விடை: அ) தர்மபுரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 1. நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி ……………. ஆகும்.

விடை: கோயம்புத்தூர் பீடபூமி

 2. கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் …………….. ஆகும்.

விடை: சோலைக்கரடு

 3. ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் ……………. மற்றும் ……………. ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

விடை: கொள்ளிடம், காவிரி

 4. ………………. தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.

விடை: நீலகிரி வரையாடு

III. பொருத்துக .

1. கூற்று : தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை

காரணம் : இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

விடை: அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

IV. சுருக்கமாக விடையளிக்கவும்.

1. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.

விடை: கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே கேரளாவும், வடக்கே ஆந்திர பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும், இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.

 2. ‘தேரீ” – என்றால் என்ன?

விடை: இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் ‘தேரி’ என்று அழைக்கப்படுகிறது.

 3. கடற்கரைச் சமவெளி எவ்வாறு உருவாகிறது?

விடை: ஆறுகளின் படிவு, கடல் அலைகளின் அரிப்பு மற்றும் படிதல் ஆகியவற்றால் கடற்கரை சமவெளி உருவாகிறது.

4. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.

விடை: பாம்பன், முயல்தீவு, குருசடை, நல்லதண்ணி தீவு, பள்ளி வாசல், ஸ்ரீரங்கம், உப்புதண்ணித் தீவு, தீவுத்திடல், காட்டுப்பள்ளித் தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியன தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்.

 5. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.

விடை: காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமந்தி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

 6. பேரிடர் அபாய நேர்வு – வரையறு.

விடை: உயிர்களுக்கும், உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பின், கூற்றுப்படி அபாய குறைப்பு என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும்.

 7. புயலின்போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?

விடை: மீனவர்கள் கூடுதலான மின்சாதனங்களுடன் (பேட்டரிகள்) ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.

இக்காலங்களில் கடலுக்குச் செல்வதை தவிர்த்து, படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

V. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

 1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.

விடை: வங்காள விரிகுடாவிலிருந்து பிரியும் ஆறுகளால் பல இடங்களில் பிரிக்கப்படுகிறது. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் இதைப் பிரிப்பதால் இவை தொடர்ச்சியற்றவை.

 2. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையைப் பெறுகிறது.

விடை: அரபிக் கடலிலிருந்து வீசும் காற்றின் மழைமறைவுப் பகுதியில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் குறைந்த மழையைப் பெறுகிறது.

 3. கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்.

விடை: வெள்ளம், சூறாவளி போன்ற பல பாதிப்புகளுக்கு கடலூர் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே கடலூர் பல்வழி பேரழிவு மண்டலம் எனப்படுகிறது.

VI. பத்தி அளவில் விடையளிக்கவும்.

1. தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.

விடை: தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.

ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இதன் உயரம் கிழக்கிலிருந்து மேற்காக உயர்ந்து செல்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டர் முதல் 600 மீட்டர் உயரம் வரை வேறுபட்டு காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாரமஹால் பீடபூமியானது மைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும்.

இதன் உயரம் சுமார் 350 மீட்டர் முதல் 710 மீட்டர் வரை காணப்படுகிறது. இந்தப் பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.

கோயம்புத்தூர் பீடபூமி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது.

இப்பீடபூமி சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூரிலிருந்து இருந்து பிரிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீட பூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன.

நீலகிரி பகுதிகளில் பல மலையிடை பீடபூமிகள் காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மதுரை பீடபூமி, மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது.

வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப் பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.

2. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.

விடை: காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.

தமிழ்நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக உள்ளது.

ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

பவானி ஆறு இதன் துணையாறாக வலதுகரையில் காவிரியுடன் இணைகிறது.

பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது,

கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன.

இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது அகன்ற காவிரி என அழைக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.

இவ்விரு கிளைகள் இணைந்து “ஸ்ரீரங்கம் தீவை” உருவாக்குகின்றன. கிராண்ட் அணைகட் என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு ‘தென்னிந்தியாவின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது.

3. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்.

விடை:  குளிர்காலம்:

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.

இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன.)

ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.

தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது. இருந்தபோதிலும் மழைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°க்கும் குறைவாக உள்ளது.

நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது.

கோடைக்காலம்:

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக்கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.

பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம், கடக ரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது.

பொதுவாக வெப்பநிலையானது 30°C லிருந்து 40°C வரை வேறுபடுகிறது. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்பருவ மழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.

4. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் பற்றி விளக்குக.

விடை: தமிழ்நாட்டின் மண் வகைகள்:

தமிழ்நாட்டில் காணப்படும் மண்களை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை

வண்டல் மண்,

கரிசல் மண்,

செம்மண்,

சரளை மற்றும்

உவர் மண்.

வண்டல் மண்:

வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன.

5. வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் இந்தியாவின் …………….. அதிக மழை பெறும் பகுதியாக உள்ளது.

விடை: மூன்றாவது

6. வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் இந்தியாவின் …………….. அதிக மழை பெறும் பகுதியாக உள்ளது.

விடை: மூன்றாவது

VI. பொருத்துக .

1. கூற்று : குளிர்க்காலத்தில் சூரியனின் சாய்வுக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் இடையே விழுகிறது.

காரணம் : குளிர்கால வெப்பநிலையானது 30°C/ – 40°C வரை மாறுபடுகிறது.

விடை: ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

 2. கூற்று : தமிழ்நாடு ஒரு வெப்ப மண்டலத்திலுள்ள மாநிலம்.

காரணம் : கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படுகிறது.

விடை: அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

பாதுகாக்கும் சில வழிமுறைகள் ஆகும்.