Chapter 10


I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 1. 1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

விடை: இ சீகன்பால்கு

2. 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.

விடை: அ) இரட்டைமலை சீனிவாசன்

3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.

விடை: அ) 1918

4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.

விடை: அ) பணியாளர் தேர்வு வாரியம்

5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

விடை: அ) எம்.சி. ராஜா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.

விடை: தமிழ்

2. புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.

விடை: F.W. எல்லிஸ்

3. ……….. தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

விடை: மறைமலையடிகள்

4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ……………. ஆகும்.

விடை: நீதிக்கட்சி

5. சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் …………….. என மாற்றம் பெற்றது.

விடை: பரிதிமாற்கலைஞர்

6. …………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

விடை: ஆபிரகாம் பண்டிதர்

7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………

விடை: டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1. i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.

ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.

iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

விடை: ஆ) (i), (iii) ஆகியன சரி

2. கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

விடை: அ) காரணம், கூற்று ஆகியவை சரி.

IV. சுருக்கமாக விடையளிக்கவும்.

1. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.

விடை: அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ் மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின.

அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின.

2. தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பை நன்குப் புலப்படுத்துக.

விடை: தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ – ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.

ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.

திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழன் தொன்மையையும் நிலைநாட்டினார்.

3. தங்களுடைய எழுத்துகளின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டிலிடவும்.

விடை: சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், சுப்பிரமணிய பாரதி, ச. வையாபுரி, கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில் தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின்

புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

4. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

விடை: நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.

அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

5. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை: தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.

6. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.

விடை: பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.

1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு.

திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.

பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.

V. விரிவாக விடையளிக்கவும்.

1. தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.

விடை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை.தாமோதரனார் உ.வே. சாமிநாதர் போன்றவர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர்.

சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறுமரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1816இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய F.W. எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ-ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.

ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.

திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.

அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழியென்றும் தமிழர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளில்லை, பாலின வேறுபாடில்லை, சமத்துவம் நிலவியது எனவும் வாதிட்டனர்.

தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது.

வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட இராமலிங்க அடிகள் நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்கஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார்.

சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்த


I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்


1. அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ………………. ஆகும்.

விடை: ஆ) தமிழ்

2. ……………….இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

விடை: ஆ) 1909

3. தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.

விடை: ஆ) சமஸ்கிருதம்

4. சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென ………….. தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.

விடை: இ 1923

5. ……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.

விடை: அ) பெரியார்

6. M.C. ராஜா என அழைக்கப்படுபவர் ………………… களை சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.

விடை: அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

7. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் …………………. நடைபெற்ற து.

விடை: இ பம்பாய்

8. சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………. ஆவார்.

விடை: ஆ) M. சிங்காரவேலர்

9. இசை நிகழ்ச்சிகளிலும் ……………… ஓரளவிலான இடத்தை பெற்றிருந்தன.

விடை: ஆ) தமிழ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மறுமலர்ச்சியானது ஒரு ………………. பண்பாட்டு நிகழ்வாகும்.

விடை: கருத்தியல்

2. தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு ……………… பங்களித்தது.

விடை: தமிழ் மறுமலர்ச்சி

3. ……………… புத்துயிரளித்த M. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.

விடை: பௌத்தம்

4. ………………. ‘தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை’ என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.

விடை: மறைலை அடிகள்

5. நீதிக்கட்சி 1926-ல் ………………. சட்டத்தை இயற்றியது.

விடை: இந்து சமய அறநிலை

6. பெரியார் ………………. சமூகத்தை விமர்சித்தார்.

விடை: ஆணாதிக்க

7. 1893-ல் ……………… எனும் அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் உருவாக்கினார்.

விடை: ஆதிதிராவிட மகாஜன சபை

8. ……………….. என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

விடை: பெண்களின் விடுதலை

9. ………………. எனும் சட்டம் அரசால் 1947-இல் இயற்றப்பட்டது.

விடை: மதராஸ் தேவதாசி சட்டம்

10. மதராஸ் தேவதாசி மசோதா சட்டமாக மாறுவதற்கு ……………… காத்திருந்தது.

விடை: 15 ஆண்டுகள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1. கூற்று : மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும்.

காரணம் : பண்பாடு மற்றும் உணர்வுகளோடு இயைந்திருப்பதால்.

விடை: இ காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

2. கூற்று : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார். ‘மதராஸ் தேவதாசி’ சட்டத்தை இயற்றினார்.

காரணம் : 1949ல் இச்சட்டம் இயற்றப்பட்டது.

விடை: ஆ) காரணம் சரி, கூற்று தவறு

IV. சுருக்கமான விடையளிக்கவும்

1.எந்தெந்த துறைகளில் மனிதநேயம் படைப்பாற்றலைத் தூண்டியது?

விடை: சமூக வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி, இலக்கியம், தத்துவம், இசை, ஓவியம், கட்டடக்கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் படைபாற்றலைத் தூண்டி எழுப்பியது.

2. நீதிக்கட்சியின் செயல்பாடுகளைக் கூறு.

விடை: நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.

நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.

3. இரட்டைமலை சீனிவாசன் பற்றிக் கூறு.

விடை: இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக

ராவ்சாகிப் (1926),

ராவ் பகதூர் (1936),

திவான் பகதூர் (1936)

ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார்.

4. பெண்கள் இயக்கங்கள் யாவை?

விடை: இந்தியப் பெண்கள் சங்கம் (WIA)

அகில இந்திய பெண்கள் மாநாடு (ALWC)

5. சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடுக.

விடை:  முத்துலட்சுமி அம்மையார்,

நாகம்மை ,

கண்ணம்மா,

நீலாவதி,

மூவலூர் இராமாமிர்தம்,

ருக்மணி அம்மாள்,

அலமேலு மங்கை தாயாரம்மாள்,

நீலாம்பிகை மற்றும்

சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள